உலகளவில் 3 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு... 9.27 லட்சம் பேர் பலி... நோயில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியைக் கடந்தது!!

ஜெனீவா:சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியைக் கடந்துள்ளது.வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.91 கோடியைத் தாண்டியுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.27 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலக அளவில் கொரோனாவால் 2,91,75,454 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,27,986 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை 2,10,20,920 பேர் குணம் அடைந்துள்ளனர். 60,690 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்கா:  67,08,458 பேர் பாதிப்பு ;1,98,520 பேர் உயிரிழப்பு; 39,74,949 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியா: 43,3.0,455 பேர் பாதிப்பு ; 79,754 பேர் உயிரிழப்பு; 37,77,044 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசில் :43,30.455 பேர் பாதிப்பு ; 1,31,663 பேர் உயிரிழப்பு ; 35,73,958 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யா: 10,62,811 பேர் பாதிப்பு ;18,578 பேர் பாதிப்பு; 8,76,225 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பெரு: 7,29,612 பேர் பாதிப்பு ;  30,710 பேர் உயிரிழப்பு; 5,66,796 பேர் குணம் அடைந்துள்ளனர்.

Related Stories: