காலி மதுபாட்டில்களை கொண்டு காட்டு யானைகளை விரட்டும் விவசாயிகள்

பந்தலூர் : பந்தலூர் அருகே காட்டு யானைகளை விரட்டுவதற்கு காலி பாட்டில்களை விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர்  சுற்றுவட்டாரம் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.வனப்பகுதியிலிருந்து இரை மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்துவது,விவசாய பயிர்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட அட்டகாசங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

குடியிருப்புக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுருத்தும் காட்டு யானைகளை விரட்டுவதற்கு பொதுமக்கள் சத்தமிட்டும்,தகரம் மற்றும் இரும்பு பொருட்களை தட்டி ஓசை எழுப்பியும்,பட்டாசுகள் வெடித்தும் காட்டு யானைகளை விரட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒருசில இடங்களில் வீட்டில் இருந்து நீண்ட வயர்கள் மற்றும் கயிறுகளில் காலி மதுபாட்டில்களை கட்டி யானைகள் குடியிருப்புக்குள் வருவதை அறிந்தவுடன், வயர்களை இழுத்து ஆட்டும் போது பாட்டில்களின் உராய்வு சத்தம் அதிகளவில் ஏற்படும் போது யானைகள் அந்த சத்தத்தில் பயந்து அங்கிருந்து நகர்ந்து செல்கின்றது. இதனை விவசாய தோட்டங்களிலும் பயன்படுத்தி காட்டு யானைகளை துரத்தி வருகின்றனர்.

Related Stories: