மூச்சுத் திணறல் காரணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி.!!!

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு (55) கடந்த மாதம் 2-ம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. டெல்லி, அருகேயுள்ள ஹரியானாவின் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு சோர்வு மற்றும் உடல் வலி காரணமாக கடந்த மாதம் 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உடல் நலம் பெற்ற அமித்ஷா, 13 நாட்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி காலை 7 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், “அமித்ஷா முழு குணம் அடைந்துள்ளார். தன்னுடைய அன்றாட அலுவல்களை அவர் சீராக செய்ய முடியும்” என்றது.

இந்நிலையில், மூச்சுத் திணறல் இருப்பதாக கூறியதை அடுத்து நேற்று இரவு 11 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுப்பட்டார்.

தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதைய அமித்ஷாவின் உடல் நிலை குறித்து தகவல்கள் எதுவும் மருத்துவ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. கொரோனா வைரஸிலிருந்து மீண்டு வந்தபின் சுவாசப் பிரச்சினைகளை அவர் சந்தித்து வந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி 13 நாட்கள் ஆகிய நிலையில் மீண்டும் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: