மழை பெய்ய வேண்டி பாறையில் கூழ் ஊற்றி குடித்த மக்கள் : உசிலம்பட்டி அருகே வினோத வழிபாடு

உசிலம்பட்டி:  உசிலம்பட்டி அருகே எம்.பாறைப்பட்டி கிராமத்தில் மேற்குத்தொடர்ச்சிலை அடிவாரம் தாழையூத்தில் 7 கன்னிமார் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் எம்.பாறைப்பட்டி, ராஜக்காபட்டி கிராமமக்கள் நேற்று மழை வேண்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் அங்குள்ள ஊற்றுத்தண்ணீரில் குளித்த ஈர உடையுடன் 7 சிறுமிகளை அழைத்து வந்து அருள்வாக்கு கேட்டனர். அப்போது அருளாடிய  சிறுமிகள் இன்னும் 3 மாதத்திற்குள் மழை பெய்ய வைப்பதாக அருள் வாக்கு கூறினர்.

அதன்பின்பு கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட நவதானியங்களை கூழ்காய்ச்சி 7 கன்னிமார்கள் கோவிலில் சாமிக்கு படைத்துவிட்டு, மலையின் மேல்  உள்ள பாறையில் கொட்டினார்கள். அதனை கிராமமக்களும், சிறுவர், சிறுமிகளும் குடித்தனர். குடித்துவிட்டு ‘கைகழுவ தண்ணீர் இல்லை. மழை வேண்டும்’ என்று சாமியை சாமியை வேண்டி கொண்டனர். இங்கு கூழ்காய்ச்சி பாறையில் கொட்டி  குடித்தால் மழை பெய்யும். எச்சில்படுத்தப்பட்ட பாறையை சாமி மழை பெய்யச் செய்து சுத்தம் செய்யும்  என்பது கிராமமக்களின் நம்பிக்கை.

Related Stories: