நான் கன்னடம் பேசும் இந்தியன்: கர்நாடகாவிலும் வைரல்

பெங்களூரு: இந்தி  தெரியாது போடா, நான் ஒரு தமிழ் பேசும் இந்தியன் என்ற டி-சர்ட் வாசகம் தமிழகத்தில்  வைரலாகி வருவதை போல் கர்நாடக மாநிலத்திலும்  நான் கன்னடம் பேசும் இந்தியன்  என்ற டி-சர்ட் அணிந்து நடிகர்கள் பிரபலபடுத்தி  வருகின்றனர். கன்னட நடிகர் சிவராஜ்குமார், சேத்தன், தனஞ்சயா ஆகியோர் நான் கன்னடம் பேசும் இந்தியன், கர்நாடகாவில் கன்னடமே தேசிய மொழி என்ற டி-சர்ட் அணிந்து போஸ் கொடுக்கும் படங்கள்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனால் தமிழகத்தில் மட்டுமின்றி  அண்டை மாநிலங்களிலும் இந்திக்கு எதிரான முழுக்கம் வலுத்து வருவது  குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் கன்னடம் தான் தேசிய மொழி என்று  வலியுறுத்தும் அளவுக்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கர்நாடக  மாநிலத்துக்கு ஏற்கனவே தனிக்கொடி கேட்டு வலியுறுத்தி வருவதும்  குறிப்பிடத்தக்கது.

Related Stories: