டிரம்புக்கு நோபல் பரிசு தகுதியான ஒன்றுதான்: வெள்ளை மாளிகை விளக்கம்

வாஷிங்டன்: பாலஸ்தீனம் விவகாரத்தால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - இஸ்ரேல் இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக பகை இருந்து வந்தது. இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம் உட்பட எந்த உறவும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடக்க வைத்து, அதன் பகையை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் முடிவுக்கு கொண்டு வந்தார்.  அமெரிக்காவில் டிரம்ப் முன்னிலையில் வரும் 15ம் தேதி,  வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

இந்நிலையில், நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் டைபிரிங் ஜெட்டே, அதிபர் டிரம்பின் இந்த முயற்சியை பாராட்டி, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும்படி நேற்று முன்தினம் பரிந்துரை செய்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கெய்லி மெக்னானி நேற்று கூறுகையில், “இஸ்ரேல் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைதி ஒப்பந்தம், வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தமாகும். இதற்காக, அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது தகுதியான ஒன்றுதான்,’’ என்றார்.

Related Stories: