அரியலூர் கரைவெட்டி ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி ஏரி நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கரைவெட்டி பரதூர் கிராமத்தில் 1100 ஏக்கர் பரப்பளவில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீர்வரத்தானது திருச்சி மாவட்டம் முசிறி அருகே வாத்தலையில் இருந்து புள்ளம்பாடி வாய்க்கால் வழியாக வருகிறது. கடந்த 18ம்தேதி திறந்து விடப்பட்ட நீர் அரியலூர் மாவட்டம் பளிங்காநத்தம் மானோடை ஏரியில் நிரம்பி, அடுத்ததாக வெங்கனூர் ஆண்டி ஓடை ஏரியின் மூலம் கரைவெட்டி ஏரிக்கு காவிரி நீர் வந்து தற்போது நிரம்பியுள்ளது.

இந்த கரைவெட்டி ஏரி மூலம் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் 25.000 ஏக்கர் பரப்பளவில் நடவு பணிகள் நடைபெற்று, நெல் பயிரிட்டு தை, மாசி மாதங்களில் விவசாயிகள் அறுவடை செய்து பயன்பெறுவர். இந்த ஏரி நிரம்பியதன் மூலம் வெங்கனூர், கரைவெட்டி, பரதூர், தட்டாஞ்சாவடி, கீழக்காவட்டாங்குறிச்சி, மேலக்காவட்டாங்குறிச்சி, குந்தபுரம், சேனாபதி, முடிகொண்டான், பாளையபாடி, அன்னிமங்கலம், திருமானூர் பகுதி விவசாயிகள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: