ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

காஞ்சிபுரம்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வரும் 7ம் தேதி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் விருது வழங்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் நாயகன்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், பெருநகர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மாலதி, கொளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லாரன்ஸ், குண்ணம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நண்பன். கீழம்பி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ்குமார், கூத்திரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சங்கரி, காஞ்சிபுரம் சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜாக்குலின் எழிலரசி ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில், சிங்கப்பெருமாள் கோயில் அரசினர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா, செங்கல்பட்டு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பாபு கிறிஸ்டோபர், மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடபெருமாள். குருவாபதன்மேடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் வரதன், மேற்கு தாம்பரம் எம்சிசிஆர்எஸ்எல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை வீதியாள் சாந்தகுமாரி, மண்ணிவாக்கம்நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியை புஷ்கலா ஆகியோரும் நல்லாசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: