சாத்தூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளிக்கு படையெடுத்த பாம்புகள்: புத்தகம் வாங்க வந்த மாணவர்கள் ஓட்டம்

சாத்தூர்: தமிழகம் முழுவதும் கொரோனோ நோய்த் தொற்று காரணமாக பள்ளி. கல்லூரிகள் அனைத்தும் 6 மாத காலமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகம் மற்றும் புதிய மாணவ மாணவியர்கள் சேர்க்கை பதிவு நடைபெறுகிறது.இதனிடையே சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச பாடப்புத்தகம் நேற்று வழங்கி கொண்டிருந்தனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள் திடீரென மூன்றிற்கும் மேற்பட்ட பாம்புகள் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டித்திற்கு அருகில் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து விளையாட ஆரம்பித்தது.

இதனைப் பார்த்த பாடப்புத்தகம் வாங்க வந்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் அச்சத்தில் பதறியடித்து கூச்சலிட்டனர். ஆனால், இதனை எதையும் கண்டுகொள்ளாத பாம்புகள் சுமார் ஒரு மணி நேரமாக விளையாடி மகிழ்ந்தன. இதன் பின் அருகில் உள்ள பள்ளி சமையலறை கட்டிடத்தின் அருகே போடப்பட்டுள்ள விறகு கட்டுக்குள் சென்று மறைந்து விட்டன.நீண்ட நாட்களாக பள்ளிகளை திறக்காமலும், துப்புரவு பணியினை மேற்கொள்ளாமலும், உள்ளதால் பாம்புகள், விஷஜந்துகள் அதிகமாக காணப்படுகிறது. பள்ளி வகுப்பறைகள், மற்றும் வளாகத்தை சுத்தப்படுத்தி துய்மையாக வைத்திருக்க வேண்டுமென. மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: