மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் திட்டங்கள் மக்கள் நலனுக்கு விரோதமானவை: EIA குறித்த கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் உரை.!!!

சென்னை: சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 குறித்த சூழலியல் கருத்தரங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக எம்.பி. கனிமொழி, இந்து குழுமம் தலைவர் என்.ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் காணாலி காட்சி மூலம் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், மத்திய அரசு கொண்டு வந்துள்ள அனைத்து சட்டங்களும் மக்கள் விரோத சட்டங்களாக உள்ளது.  

குடியுரிமை, பொருளாதார சட்டங்கள் எந்த விதத்திலும் நன்மை பயக்க வில்லை. திட்டங்களையோ, தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதையோ தி.மு.க. எதிர்க்கவில்லை. சுற்றுச் சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த திட்டமும் கொண்டு வரக்கூடாது. போபாலில் ஆலையில் இருந்து விஷவாயு கசிந்ததால் பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். போபால் விஷ வாயு போன்ற விபத்து நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் சுற்றுச் சூழல் சட்டம் கொண்டு வரப்பட்டது. சுற்றுச் சூழல் அனுமதி சட்டத்தை முழுமையாக ரத்து செய்து விடலாம். சுற்றுச் சூழலை நாசம் செய்யும் தொழில்கள் தேவை இல்லை. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையானது தனியார் மயமாக்க வழி வகுக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.

Related Stories: