மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளரிடம் நூதன முறையில் செல்போன் பறிப்பு

ஆவடி: ஆவடி, ஜேபி எஸ்டேட், முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜோதிமணி (50). இவர், இதே பகுதியில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜோதிமணி வியாபாரம் முடிந்து கடையை பூட்டி கொண்டு இருந்தார். அப்போது அங்கு 15வயது மதிக்கத்தக்க சிறுவன் வந்துள்ளான். பின்னர், அவன் ஜோதிமணியிடம் அவசரமாக போன் பேச வேண்டும். உங்களது செல்போனை தாருங்கள் என கேட்டுள்ளான். இதனையடுத்து, அவரும் தனது பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து அவனிடம் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு, சிறுவன் போனில் பேசுவது போல் நடித்து உள்ளான். பின்னர், அவன் திடீரென்று செல்போனுடன் அங்கிருந்து தப்பி ஓடினான். இதனை பார்த்த ஜோதிமணி அவனை பின் தொடர்ந்து விரட்டி உள்ளார். அதற்குள், அவன்  இருளில் தப்பி தலைமறைவானான். இது குறித்து ஜோதிமணி ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் செல்போனை நூதன முறையில் செல்போனை பறித்து சென்ற சிறுவனை தேடி வருகின்றனர்.

Related Stories: