இன்று விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து 7ம் தேதி தொடங்க உள்ளது. இதன்படி தொலை தூர அரசு விரைவு பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் தயாராகி வருகிறது. முதல் கட்டமாக 400 குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. www.tnstc.in என்ற இணைய தளம் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்யலாம்.

Related Stories: