சிங்கப்பூரின் எதிர்க்கட்சி தலைவரானார் ப்ரித்தம் சிங்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஜூலை 10ம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேர்தலில், ஆளும் லீ சியன் லூங்கின் பீப்புள் ஆக்சன் கட்சி 83 இடங்களில் வென்றது. ப்ரித்தம் சிங்கின் ஒர்க்கர்ஸ் பார்ட்டி கட்சியானது மீதமுள்ள 10 இடங்களை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், ப்ரித்தம் சிங்கை பிரதான எதிர்க்கட்சித்தலைவராக சபாநாயகர் இந்திராணி ராஜா அறிவித்தார். சிங்கப்பூர் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் எதிர்க்கட்சித்தலைவராக பதவியேற்பது இதுவே முதல்முறை.

Related Stories: