கொரோனா விடுமுறையில் நாற்றங்கால் நடவு பணியில் கல்லூரி பேராசிரியர்கள்

பந்தலூர்: பந்தலூர் அருகே நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனா விடுமுறை காரணமாக  மாணவர்களுக்கு  ஆன்லைன் வகுப்பு நடக்கிறது. வகுப்பு முடிந்த பின் பேராசிரியர்கள் கல்லூரி ஊழியர்களுடன் இணைந்து தினமும் கல்லூரி  கலையரங்கத்தில் பழக்கன்றுகள், காபி, மிளகாய், காய்கறி, பூச்செடிகள் உள்ளிட்ட பல்வேறு வகை நாற்றங்கால்களை குடுவைகளில் மண் நிரப்பி இயற்கையான மாட்டுச்சாணம் உள்ளிட்ட உரங்களை பயன்படுத்தி வளர்த்து வருகின்றனர்.

இது குறித்து கல்லூரி நிர்வாக இயக்குனர் ராசித் கஷாலி கூறுகையில்,‘காய்கறி உள்ளிட்ட பல்வேறு நாற்றுகளை இயற்கை உரமிட்டு உருவாக்கி வருகிறோம் .இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில்  நாற்றங்கால் மூலம் நாற்றுகளை உருவாக்கி  சுற்றுவட்டாரம் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு விலைக்கு  கொடுத்து வருவாய் ஈட்டுகிறோம். மேலும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு இப்பணி மிகவும் பயன் உள்ளதாக அமைகிறது வருங்காலங்களில் கல்லூரி மாணவர்களையும் இப்பணிகளில் இணைத்து செயல்பட உள்ளோம்’, என்றார்.

Related Stories: