சிறப்பாசிரியர்களுக்கு நிரந்தர பணி ஆணை: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை :

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் சுமார் 16,000 பேர் கடந்த 2012ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் வேலை அளிக்கப்பட்டு வருகிறது. வருடம் 11 மாதங்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இவர்களின் பணிக்கு தொகுப்பு ஊதியமாக ரூ.7,700 வழங்கப்பட்டு வருகிறது. இவர்களை நம்பி பல ஆயிரம் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே தமிழக அரசு கருணையுள்ளத்தோடு, சிறப்பாசிரியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: