ஞானதிரவியம் எம்பிக்கு கொரோனா

நெல்லை: நெல்லை தொகுதி எம்பி ஞானதிரவியம், அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. நெல்லை தொகுதி எம்பி ஞானதிரவியம். கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சென்று நிவாரண உதவிகள் வழங்கி வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதியானது. அவரது மனைவி சுதேச ஹேமலதாவிற்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: