ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வாக்கு வேட்டை: பரபரப்பான கட்டத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல்

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முந்துவதாக வெளியாகும் கருத்துக் கணிப்புகளுக்கிடையில், தமது செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி தீவிரம் காட்டி வருகிறது. உயர் பதவியில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வருவது டிரம்ப் அரசுதான் என்று பிரச்சாரம் செய்து பெண்களின் ஆதரவை பெற குடியரசு கட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் மேரின்லான் மாநிலம் பாஜிபோன் என்ற நகரம் ஒன்று உள்ளது. இங்குதான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வந்த நிலையில், திடீரென மனைவி மெலினியாவுடன் இணைந்து மாநாடு நடைபெற்ற மேடைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். பொதுவாக அமெரிக்க அதிபர்கள், கட்சி மாநாடுகளில் அரிதாகவே கலந்துகொள்ளும் நிலையில், டிரம்பின் வருகை தொலைக்காட்சி மூலம் பார்த்துக்கொண்டிருந்த குடியரசு கட்சி ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

இதனிடையே அமெரிக்க அதிபர் வரலாற்றில் டொனால்டு டிரம்ப் மட்டுமே, உயர் பதவிகளில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருப்பதாக பிரச்சாரத்தை புதிய கோணத்தில் திருப்பியுள்ளது டிரம்பின் குடியரசு கட்சி. இதற்கிடையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு வேட்டையை அதிகரித்து வருகிறார். அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வருகின்ற நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளைவிட இம்முறை 10 சதவீத வாக்குகள் அதிகரிக்கக்கூடும் என தேர்தல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.

Related Stories: