தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் 3 நாட்களுக்குள் திரும்பி செல்வதாக இருந்தால் தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை: இ - பாஸ் நடைமுறையில் புதிய தளர்வுகள் அறிவிப்பு!!

சென்னை : வணிகரீதியாக தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு உடனடி இ - பாஸ் வழங்கப்படும் என்றும் அவர்கள் 3 நாட்களில் வெளியேறுவதாக இருந்தால் தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ - பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, இ -பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டது. இருப்பினும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே மக்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதனிடையே கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண இ - பாஸ் அவசியம் என நேற்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.  தமிழகத்தில் இ-பாஸ் தொடரும் என்பதையே அவர் இப்படி சூசகமாக கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இ - பாஸ் நடைமுறையில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வணிக ரீதியாக தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு உடனடி இ - பாஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அவர் 72 மணி நேரத்தில் வெளியேறுவதாக இருந்தால் தனிமைப்படுத்துதல் கிடையாது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் திரைத்துறையினர், சட்டப் பணி, தொழில்துறையினர், ஐ.டி ஊழியர்கள் உள்ளிட்ட தொழிற்சார்ந்த பணிகளுக்கு வருவோருக்கும் தனிமைப்படுத்துதல் கிடையாது. இதனால் சென்னைக்கு பலர் படையெடுக்க வாய்ப்புள்ளது.தொழிற்துறை சார்ந்த பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக இ-பாஸ் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: