டிக்டாக் சிஇஓ ராஜினாமா

ஹாங்காங்: சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான டிக்டாக் ஆப் உட்பட சீனாவின் 106 ஆப்களை, லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் கொன்றதை தொடர்ந்து மத்திய அரசு தடை செய்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை டிக்டாக்கிற்கு, இந்நாட்டு அதிபர் டிரம்ப் தடை விதித்தார். மேலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு டிக்டாக்கை விற்கும்படியும் உத்தரவிட்டார். இந்நிலையில், டிக்டாக்கின் தலைமை செயல் அதிகாரியான கெவின் மேயர், நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே, அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

Related Stories: