நியூசிலாந்து மசூதியில் 51 பேரை சுட்டுக்கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை!: தீர்ப்பை வரவேற்று கிறைஸ்ட்சர்ச்சில் முஸ்லிம்கள் கொண்டாட்டம்..!!

வெலிங்டன்: நியூசிலாந்தில் கடந்த ஆண்டு மசூதிகளில் புகுந்து 51 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற பயங்கரவாதிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து வெலிங்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை வரவேற்கும் விதமாக கிறைஸ்ட்சர்ச்சில் முஸ்லிம்கள் ஆடல், பாடலுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதி ஆகியவற்றில் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 4 பேர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். 51 பேர் இதில் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான விசாரணை நடத்தி வந்த வெலிங்டன் நீதிமன்றம் முக்கிய குற்றவாளியான ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரெண்டன் டாரண்டுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து கிறைஸ்ட்சர்ச்சில் முஸ்லிம் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து துப்பாக்கிச்சூட்டில் தப்பிய நபர் தெரிவித்ததாவது, கடவுள் எங்களை ஆசிர்வதித்துள்ளார். குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதிக்கு நன்றி..நன்றி. டாரண்ட்டை போன்ற தீயசக்திகளை கடவுள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார் என்று குறிப்பிட்டார்.

ஈவு இரக்கமின்றி, மனிதாபிமானமின்றி மக்களை டாரண்ட் கொன்றுவிட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். வெலிங்டன் நீதிமன்ற வரலாற்றில் ஒருவருக்கு எஞ்சிய ஆயுள் முழுவதும் சிறை தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Related Stories: