காங்கிரஸ் கட்சியில் ஐவர் குழு அமைப்பு

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வரும் அவசர சட்டங்கள் குறித்து கட்சியின் நிலைப்பாட்டை தீர்மானிக்க காங்கிரசில் 5 மூத்த தலைவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி மத்திய அரசு பல்வேறு அவசர சட்டங்களை கொண்டு வந்து, அவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்கி வருகிறது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய அவசர சட்டங்கள் குறித்து விவாதிக்கவும், அவற்றின் கட்சியின் ஒருமனதான நிலைப்பாட்டை தீர்மானிக்கும் காங்கிரசில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ப.சிதம்பரம், திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ், அமர் சிங், கவுரவ் கோகாய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜெய்ராம் ரமேஷ் செயல்படுவார் என காங்கிரஸ் கமிட்டி கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.

Related Stories: