யூடியூப்பில் ஒலிக்குது ‘மாங்கல்யம் தந்துனானே...’ சிக்கனமான திருமணங்களால் சிக்கலில் தவிக்கும் வர்த்தகர்கள்: தொழில் பாதிப்பதாக குமுறல்

பழநி:  கொரோனா பரவல் காரணமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. 50 பேருக்கு  மேல் பங்கேற்கக்கூடாது என்பது உள்ளிட்ட நடைமுறைகளால், திருமணங்களை எளிமையாக நடத்த துவங்கி விட்டனர்.முகூர்த்த நாளான நேற்று திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள திருஆவினன்குடி, பாதவிநாயகர் கோயில்கள் முன்பும், கிரி வீதிகளில் உள்ள சிறிய  கோயில்கள் முன்பும் நேற்று ஏராளமான திருமணங்கள் நடந்தன.யூடியூப்பில் முலம் மந்திரங்களை ஒலிக்க வைத்து, வாத்தியங்களுக்கு பதிலாக கைத்தட்டி திருமணங்களை எளிமையாக நடத்திக் கொண்டனர்.

இதனால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நம்பியிருக்கும் ஏராளமான தொழிலாளர்கள் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர். மைக்செட் உரிமையாளர் அலாவுதீன் கூறுகையில், ‘‘திருமண நிகழ்ச்சியின் மூலம் பத்திரிகை விற்பனையாளர், அச்சக உரிமையாளர், சமையலர்,  மைக்செட் மற்றும் மணவறை அமைப்பாளர், புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள், நாதஸ்வர கலைஞர்கள், புரோகிதர்கள், திருமண மண்டபம்  மற்றும் லாட்ஜ் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினர் தொழில் வாய்ப்பு பெறுவர். தற்போது இவைகளுக்கு தேவையில்லாத நிலை ஏற்பட்டு விட்டது. எளிமையாக நடைபெறும் இத்திருமணங்களினால் இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களது குடும்பம்  வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறது’’ என்றார்.

Related Stories: