இ - பாஸ் முறை, தனிமைப்படுத்துதல், வீடுகளில் ஸ்டிக்கர் உள்ளிட்ட அனைத்து விதிகளையும் அடியோடு ரத்து செய்தது கர்நாடக அரசு!!

பெங்களூரு: மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி கர்நாடக மாநில அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்துள்ளது. மேலும் இடம்பெயர்வோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் கைவிட்டுள்ளது. இது குறித்து, கர்நாடக மாநில அரசின் குடும்பம் மற்றும் சுகாதார துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தார் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்திற்கு வெளி மாநிலத்தில் இருந்து வருகிற நபர்கள் சேவா சிந்து என்ற செயலியில் பதிவு செய்து இ-பாஸ் பெற வேண்டும், விமானம் மற்றும் ரோடு வழியாக வந்தால் மருத்துவ பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும், மாநில எல்லைகளில் வாகனங்களை பரிசோதித்தல், இடம் பெயர்வோர் கையில் முத்திரை குத்தப்படுவது,தனிமைப்படுத்தபடுவோர் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படுதல்,14 நாள் தனிமையில் இருப்பது உள்ளிட்ட 7 விதிமுறைகள் கட்டாயம் ஆகும். இந்நிலையில் மத்திய அரசின் புதிய வழிக்காட்டுதலின்படி தற்போது நடைமுறையில் இருக்கிற அனைத்து விதிகளும் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன.

அதே நேரம் கர்நாடக மாநிலத்திற்கு வருகிற நபர்கள் தங்களை சுயமாக 14 நாள் தனிமைப்படுத்தி கொள்வது அவசியமாகும். வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிற நபர்கள் உடனடியாக 14410 என்ற உதவி நம்பரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவேண்டும். வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களின் உடல் நலத்தை கண்காணிப்பதற்கு மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த புதிய உத்தரவின்படி மாணவ மாணவிகள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எவ்வித நெருக்கடி இன்றி கர்நாடக மாநிலத்திற்கு வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறினார்.

Related Stories: