தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸுக்கு 'ஹால் ஆஃப் பேஃம்'விருது வழங்கி ஐசிசி கெளரவம்!!

துபாய் : தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸ் ஐசிசி ஹால் ஆஃப் பேஃம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஹால் ஆப் ஃபேம் என்பது ஐசிசி அமைப்பின் ஒரு உயர்ந்த பட்டமாகும். கிரிக்கெட் விளையாட்டுக்கு பல்வேறு பங்களிப்புகள், சாதனைகள் புரிந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டு கவுரவம் செய்யப்பட்டு வருகின்றனர். இது பட்டமாக இல்லாவிட்டாலும்கூட ஐசிசி ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் வீரர்கள் இணைவது மிகப்பெரிய மரியாதையாகச் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் கருதப்படுகிறது.

 அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸ் இந்தாண்டு ஐசிசியின் ஹால் ஆஃப் பேஃம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜாக்ஸ் காலிஸ் தனது முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக 1995ம் ஆண்டும், கடைசி டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக 2013ம் ஆண்டும் விளையாடினார்.இவர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 166 டெஸ்ட் போட்டிகளிலும், 328 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள காலிஸ் முறையே 13,289 ரன்களும், 11579 ரன்களும் எடுத்துள்ளார். அதேபோல பந்துவீச்சில் டெஸ்ட்டில் 292 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 273 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சிறப்புக்குரியவர் ஜாக் காலிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: