அதிமுக ஒன்றிய செயலாளருக்கு கொரோனா: குடும்பத்தினர் 7 பேருக்கு தொற்று

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளராக மாமல்லபுரத்தை சேர்ந்த ராகவன் நியமிக்கப்பட்டார். இதைதொடர்ந்து, மூத்த நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களை அதிமுகவில் இணைக்கும் நிகழ்ச்சி அவருக்கு சொந்தமான ஓட்டலில் நடந்தது. அப்போது, கட்சிக்காரர்கள் அதிகளவு கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் ராகவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரை பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதியானது.

தொடர்ந்து, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை செய்ததில், அவரது தந்தை, தாய், மனைவி, குழந்தை, பாட்டி, சித்தி உள்பட 7 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர்கள், சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்டு கிழக்கு ஒன்றியம் முழுவதும் கட்சியினரை சந்தித்தும், மாற்று கட்சியினரை கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சியும் நடத்திய நிலையில் ஒன்றிய செயலாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கட்சியினர் பீதியிலும், கலக்கத்திலும் உள்ளனர்.

* அதிகரிக்கும் உயிர்பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தில் இதுவரை 22,286 பேருக்கு தொற்று உறுதியானது. மாவட்டத்தில் 19,295 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில், 3 பேர் இறந்தனர். மாவட்டத்தில் இதுவரை 363 பேர் இறந்துள்ளனர். நாளுக்குநாள் மாவடட்த்தில் கொரோனா அதிகரித்து, நோய் தாக்கம் காரணமாக இறப்பும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளது.

Related Stories: