பின்னணி பாடகர் எஸ்.பி.பி குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் கூட்டு பிரார்த்தனை

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பி குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திரை பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள், பொதுமக்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். பாரதிராஜா அழைப்பு விடுத்ததன் பேரில் திரைப் பிரபலங்கள், இசைக்கலைஞர்கள் பிரார்த்தனை செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நடிகர்கள் சரோஜாதேவி, சிவக்குமார், பார்த்திபன், ராதிகா உள்ளிட்டோரும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், வசந்த், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோரும் பிரார்த்தனை செய்தனர். நடிகர்கள் பிரபு, சரத்குமார், சத்யராஜ், பாடகர்கள் சித்ரா, மனோ உள்ளிட்டோரும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: