காஷ்மீரில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள 10 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் உடனடி வாபஸ்

புதுடெல்லி ; காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, துணை ராணுவத்தை சேர்ந்த ஏராளமான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், காஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் வீரர்களை உடனடியாக திரும்ப அழைத்து கொள்ள முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய ஆயுதப்படை போலீசார், எல்லை பாதுகாப்புப் படை உள்ளிட்ட படைகளை சேர்ந்த வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு,  பழைய பணியில்அமர்த்தப்பட உள்ளனர்.

Related Stories: