வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் ஜவுளி ஏற்றுமதி கடும் பாதிப்பு!!...ஈரோட்டில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேதனை!!!

ஈரோடு:  வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஈரோட்டில் உற்பத்தியான பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் ஏற்றுமதி செய்யமுடியாமல் தேக்கமடைந்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு, தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகின்றன. இதனால் பல்வேறு தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால் சற்று நிம்மதியடைந்துள்ள வியாபாரிகள் தங்களது நிறுவனங்களை இயக்கி வருகின்றன.

அந்த வகையில் இயக்கப்பட்டுள்ள விசைத்தறி நிறுவனமானது தற்போது மீண்டும் உற்பத்தியை இழந்து தவித்து வருகிறது. அதாவது, கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த விசைத்தறிகள் தற்போது திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இதனால் ஜவுளி ஏற்றுமதி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வட மாநிலங்களில் 20 நாட்களுக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு துணிகளை ஏற்றுமதி செய்யமுடியாமல் வியாபாரிகள் திணறி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, 20 நாட்களில் மட்டும் 40 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளதாக விசைத்தறி உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் ஊரடங்கால் ஏற்கனவே ஜவுளி உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வடமாநிலங்களில் பெய்துவரும் தொடர் மழை, கூடுதல் சுமையை தந்துள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories: