ஐ.பி.எல் 2020 தொடரின் டைட்டில் ஸ்பான்சரை தட்டிச் சென்றது டிரீம் லெவன்...: ரூ.222 கோடிக்கு ஒப்பந்தம் என தகவல்!

புதுடெல்லி: ஐ.பி.எல் 2020 தொடரின் டைட்டில் ஸ்பான்சரை டிரீம் லெவன் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. உலகஅளவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு மிகப் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதன்காரணமாக, அந்தப் போட்டிகளின்போது விளம்பரம் செய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் பல ஆர்வம் காட்டிவந்தன. கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான டைட்டில் ஸ்பான்சரை 2,200 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் விவோ நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், கல்வான் பகுதியில் நடந்த மோதலை அடுத்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது இதனால், 59 சீன செயலிகளை தடை செய்து இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தது.

ஐபிஎல் தொடரின் முக்கிய விளம்பர நிறுவனமாக இருந்த விவோ ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து,  ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 300 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கலாம் என்று கடந்த வாரம் பிசிசிஐ அறிவித்திருந்தது. டிரீம் லெவன், அமேசான், பைஜூ, பதஞ்தசலி, ஜயோ, டாடா எனப் பல நிறுவனங்கள் இதற்காகப் போட்டிப் போடுவதாகத் தகவல் வெளியானது. ஆனால், பைஜூவுக்கும், டிரிம் லெவனுக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவுகிறது என்று கூறப்பட்டது.

இந்நிலையில், கொரோனா காலத்தில் மக்களுக்காகப் பணத்தை வாரி வழங்கிய டாடா நிறுவனம், ஏற்கனவே, ஐபிஎல் பார்ட்னராக இருக்கும் டிரீம் 11 மற்றும் இந்திய அணிக்கு ஜெர்சி ஸ்பாரன்சராக இருந்த பைஜூ நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டைட்டில் ஸ்பான்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரீம் 11 நிறுவனம் 222 கோடி ரூபாயும், பார்ன்ட்னர்களாக இருக்கக் கூடிய டாடா 180 கோடி ரூபாய் மற்றும் பைஜூ 125 கோடி ரூபாய் இந்த வருடம் பிசிசிஐக்கு அளிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. டிரீம் 11 மற்றும் பைஜூ நிறுவனம் ஏற்கெனவே கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக இருந்துள்ளன. இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக பைஜூ நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: