கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ள ரஷ்ய அரசுடன் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சு..!!

மாஸ்கோ: கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ள ரஷ்ய தரப்புடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கமலையா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி ஸ்பூட்னிக் - வி என்ற தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்திய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தனது மகளுக்கு அதனை செலுத்தி இருப்பதாக தெரிவித்தார். இதனை உலகளவில் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் - வி கோவிட் தடுப்பு மருந்து மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து குறித்து ரஷ்ய தரப்புடன் மாஸ்க்கோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ரஷ்யாவின் ஸ்பூட்னிக் - வி கோவிட் - 19 தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த விவரங்களுக்குகாக காத்திருப்பதாக மாஸ்க்கோ இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டில் தங்கள் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அதன் பிறகே பிற நாடுகளுக்கு விற்பனை செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: