பரமக்குடியில் நகராட்சி சார்பில் தற்காலிக காய்கறி கடை

பரமக்குடி :  தமிழகம் முழுவதும் கொரோனா படுவேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,016 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக பரமக்குடி நகராட்சி  மற்றும் வருவாய் துறை சார்பாக காய்கறி மார்க்கெட்டுகளை மாற்றி சமூக இடைவெளி ஏற்படுத்துவதற்காக தற்காலிகமாக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடுமையான வெயில் உள்ளதால் தற்காலிக காய்கறி கடைகளில் நகராட்சி சார்பாக மேற்கூரை அமைக்கப்பட்டு, ஒரு மீட்டர் அளவுக்கு சமூக இடைவெளி வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதை  பொதுமக்கள் பின்பற்றி  நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் காய்கறிகளை வாங்கி வருகின்றனர். இதுபோன்று, நகராட்சி பகுதியில்  செயல்படும் மருந்து கடைகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகளில் சமூக இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முறையாக பயன்படுத்தி, வைரஸை  தடுப்பதற்கு அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், உங்கள் உயிரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டு என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்….

The post பரமக்குடியில் நகராட்சி சார்பில் தற்காலிக காய்கறி கடை appeared first on Dinakaran.

Related Stories: