சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு..!!!

மதுரை: சாத்தான்குளம் தந்தை - மகன் சித்ரவதை கொலை வழக்கில் கைதாகியுள்ள ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டு கோயில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தது தொடர்பாக முதலில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், தற்போது சி.பி.ஐ. காவல்துறை தந்தை, மகன் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் சார்பு ஆய்வாளர்களான ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவலர்கள் என மொத்தம் 10 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் கொரோனா நோய் தொற்று தாக்குதலுக்குள்ளான பால்துரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உடல்நல குறைவு காரணமாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அது தொடர்பான மனு இன்று மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் தாண்டவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் இறந்த தந்தை - மகன் உடலில் காயங்கள் இருந்தது. தொடர்ந்து, இவரை வெளியே விட்டால் சாட்சியங்களை களைத்துவிடுவார் என்று சுட்டிக்காட்டி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதி ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் வெயிலுமுத்து ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: