தேனியில் எச்.டி.எஃப்.சி. வங்கியில் 4 பேருக்கு தொற்று உறுதியானதால் வங்கி அலுவலகம் தற்காலிகமாக மூடல்!!

தேனி:  தேனி மாவட்டம் எச்.டி.எஃப்.சி. வங்கியில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வங்கி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், வங்கி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. அதாவது இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8554 ஆக உள்ளது.

இதில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3002 ஆக உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்றானது மேலும் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் சமீப காலமாக தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் தொற்றானது உறுதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக அதில் பலரும் உயிர்கொல்லி கொரோனாவிற்கு பலியாகி வருகின்றனர்.

இந்த சம்பவம் அனைத்து சமூகத்தினிடையே பெரும் சோகத்தை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேனியில் உள்ள எச்.டி.எஃப்.சி. வங்கியில் 4 அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை மற்ற ஊழியர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, வங்கியில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கும் பரிசோதனையாது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related Stories: