சாத்தான் குளம் கொலை வழக்கில் கைதாகி உரிழந்த பால்துரை மரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை!

மதுரை: சாத்தன் குளம் கொலை வழக்கில் கைதாகி உரிழந்த பால்துரை மரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணையானது தொடங்கி நடைபெற்று வருகிறது. சாத்தான் குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதாகி மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயர் சக்கரை நோய் மற்றும் மாரடைப்பால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அவரது உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில் பால்துறையின் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட வில்லை என்றும் தன்னுடைய கணவரை தேவையில்லாமல் இந்த வழக்கில் சேர்ந்துள்ளதாகவும்  கூறியுள்ளார். மேலும் கணவரின் உடலை தங்களது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேட்டுக்குடி என்ற பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பால்துரை கொரோனாவால் உயிரிழந்த காரணத்தினால், மாஜிஸ்திரேட் மூலம் தற்போது விசாரணையானது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து விசாரணை மேற்கொள்ள மதுரையில் உள்ள மாஜிஸ்திரேட் அதிகாரி பத்மநாபன் மருத்துவமனையின் பிணவறைக்கு வந்துள்ளார். இந்த நிலையில் பால்துறைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விசாரணையானது நடைபெற்று வருகிறது.  மேலும், பால்துறையின் மனைவி மங்கையர் திலகம் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையானது முடிந்தபிறகே உடலானது உடற்கூறு ஆய்விற்குட்ப்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: