சென்னை- போர்ட் பிளேயர் இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தின் மூலம் அந்தமானில் சுற்றுலாத்துறை மேம்படும் : பிரதமர் மோடி உரை!!

புதுடெல்லி : சென்னை மற்றும் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை (ஓ.எஃப்.சி) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அதிவிரைவு பிராட்பேண்ட் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை போர்ட் பிளேர், போர்ட் பிளேர் - இதர தீவுகள் ஆகியவற்றுக்கிடையே ஏறத்தாழ 2300 கிலோமீட்டர் தொலைவிற்கு கடலுக்கடியிலான கேபிள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து சென்னைக்கும் போர்ட் பிளேருக்கும் இடையே கடல்வழிக் கண்ணாடி இழை கேபிள் தொடர்பை இன்று காணொளி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்து நாட்டுக்கு அர்பணித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை தொடங்கி வைத்ததை அதிர்ஷ்டவசமாக கருதுகிறேன்.இந்த திட்டத்தின் மூலம் அந்தமான், நிகோபார் பகுதிகளுக்கு அதிவிரைவு இணையதள வசதி கிடைக்கும். இதனால் ஆன்லைன் வகுப்புகள், சுற்றுலா, வங்கி, ஷாப்பிங் அல்லது டெலிமெடிசின் அனைத்திலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன் பெறுவர். அதிநவீன இணையதள வசதியால் அந்தமானில் சுற்றுலாத்துறை மேம்படும். அந்தமானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த வசதியின் பெரும் நன்மையைப் பெறுவார்கள், ஏனெனில் எந்தவொரு சுற்றுலா தலத்திற்கும் சிறந்த இணையதள வசதி முன்னுரிமையாகிவிட்டது.மொபைல் மற்றும் இணைய இணைப்பின் முக்கிய சிக்கல் இன்று தீர்க்கப்பட்டுள்ளது. இது தவிர, சாலை, காற்று மற்றும் நீர் வழியான இணைப்புகளும் அந்தமானுடன் பலப்படுத்தப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு, மேற்கு கடற்கரையில் இந்தியாவின் முதல் deep-draft கிரீன்ஃபீல்ட் துறைமுகத்திற்கு முதன்மை ஒப்புதல் கிடைத்துள்ளது. கிழக்கு கடற்கரையில் deep-draft உள் துறைமுகத்தின் கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன. என்றார்.

Related Stories: