பெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜினாமா!

பெய்ரூட்:  லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேமினால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கரமான குண்டு வெடிப்பில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள பலரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் சேதத்தை பெய்ரூட் நகரம் சந்தித்துள்ளது. நீண்ட நாட்களாக துறைமுகத்தில் டன் கணக்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அமோனியம்  நைட்ரேட் என்ற வேதிப் பொருள் தீப்பிடித்து வெடித்ததன் விளைவே இன்று பெய்ரூட் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.  

இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஆளும் லெபனான் அரசுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு பிரதமர் ஹசன் பதவி விலக்கோரி பொது மக்கள் பெய்ரூட்டின் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், லெபனான் தகவல் தொழிநுட்ப துறை அமைச்சர் மானல் அப்டெல் சமாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்களை பாதுகாக்க லெபனான் அரசு தவறிவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில், லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேமினால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். அம்மோனியம் நைட்ரேட் வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், லெபனான் நாட்டின் பிரதமர், இந்த பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு கட்டாரை வற்புறுத்தியதாகவும் கூறப்படுறிது.

Related Stories: