உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்களை திறக்க புதிய நெறிமுறைகள்!: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு..!!

டெல்லி: 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் ஆகியவை இன்று முதல் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா மையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில்  உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் ஆகியவைகளை இன்று முதல் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும் தொற்று அதிகமாக உள்ள தமிழகம், டெல்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இவற்றை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நெறிமுறைகளின்படி, அறிகுறி இல்லாத நபர்களை  மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்து நபர்களும் ஆரோக்யா சேது செயலியை செல்போன்களில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என்றும், சானிடைசர், ஆக்சி மீட்டர் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 6 அடி சமூக இடைவெளியை பார்க்கிங் உட்பட எல்லா இடங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என்றும் யோகா செல்லும் இடங்களில் செருப்புகளோடு செல்ல அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: