ராமர் கோயில் பூமி பூஜைக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புனித நீர் தமிழக பாஜ சார்பில் அனுப்பி வைப்பு

சென்னை: அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோயில் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை வருகிற 5ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு புனித தலங்களில் இருந்து புனித நீர் மற்றும் புனித மணல் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. தென்னிந்தியாவின் முக்கியமான புனித தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து புனித மணல் மற்றும் புனித நீர் சேகரிக்கப்பட்டன. பின்னர் அங்குள்ள காஞ்சி சங்கர மடத்திலுள்ள ஆஞ்சநேயர் சன்னதி முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த சிறப்பு பூஜைக்கு பின்னர் அவற்றை கார் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னைக்கு கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தம் மற்றும் புனித மணலை, பாஜ மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் தலைமையில் இளைஞரணி நிர்வாகிகள் தமிழக பாஜ அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்திடம் வழங்கினர். அவர் அவற்றை விமானம் மூலம் அயோத்திக்கு அனுப்பி வைத்தார்.

Related Stories: