மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி..: பாஜகவினர் அதிர்ச்சி

புதுடெல்லி: 2020 மார்ச் மாதம் கொரோனா அலை இந்தியாவில் வீசத் தொடங்கியது. உடனே மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இதனால் நோய்த் தொற்று பரவல் கட்டுப்படும் என்று கருதினர். மாறாக நாள்தோறும் புதிய நோயாளிகள் அதிகரித்துக்கொண்டே சென்றனர். புதிய நோயாளிகள் அதிகரித்தாலும் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இறப்போரின் சதவிகிதம் குறைவதும் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. இதற்கிடையில், இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். சாமானியர்கள் முதல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் வரை பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், நான் சோதனை செய்ய முடித்தேன். மிக லேசான அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியானது. நான் நலமுடன் இருக்கிறேன். ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட நீங்கள் அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி கொள்ளவும் என கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பாஜகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பொய்யான செய்திகள் வெளியானது. அப்போது இந்த வதந்திகளை அமித் ஷா மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: