ஆந்திராவில் வித்யா வாரதி எனும் நடமாடும் பள்ளி அறிமுகம்!: ஊரடங்கால் மாணவர்களின் கல்வி பாதிப்பதை தடுக்க நடவடிக்கை..!!

அமராவதி: ஆந்திராவில் செல்போன் மற்றும் தொலைக்காட்சி வசதி இல்லாத மாணவர்களின் நலனுக்காக வித்யா வாரதி எனும் நடமாடும் பள்ளியை அம்மாநில அமைச்சர் சுரேஷ் தொடங்கி வைத்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆந்திராவில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாணவ, மாணவிகளுக்கு அரசு தொலைக்காட்சிகள் மூலம் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு தினமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செல்போன் மற்றும் தொலைக்காட்சி வசதி இல்லாத மாணவ, மாணவிகளின் வசதிக்காக வித்யா வாரதி எனும் பெயரில் நடமாடும் கல்வி திட்டத்தை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கல்வி அமைச்சர் சுரேஷ் தொடங்கி வைத்துள்ளார்.

ஆந்திராவில் சுமார் 1 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு எந்தவித வசதியும் இல்லை என்று தெரியவந்துள்ளது. அவர்களின் வசதிக்காகவே வித்யா வாரதி என்ற பெயரில் நடமாடும் கல்வி வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஊரடங்கால் மாணவர்களின் கல்வி பாதிப்பதை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: