இனி தங்கத்தை காட்சி பொருளாக தான் பார்க்க முடியும் போல; சவரன் ரூ.456 உயர்ந்து ரூ. 41,200-க்கு விற்பனை: விழிபிதுங்கிய படி நிற்கும் பெண்கள்!!

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 11வது நாட்களாக அதிகரித்து சவரன் 41 ஆயிரத்தை தொட்டது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.456 உயர்ந்து ரூ.41,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.57 அதிகரித்து ரூ.5,150 ஆக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த 20ம் தேதி முதல் தொடர்ச்சியாக உயர்ந்து புதிய சாதனை படைத்து வருகிறது. ஜூலை 20ம் தேதி ஒரு சவரன் ரூ.37,616, 21ம் தேதி ரூ.37,736க்கும், 22ம் தேதி ரூ.38,184, 23ம் தேதி ரூ.38,776க்கும், 24ம் தேதி ரூ.39,080க்கும், 25ம் தேதி ரூ.39,232க்கும், 27ம் தேதி ரூ.40,104க்கும் விற்பனையானது.

தொடர்ந்து 8வது நாளானநேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,037க்கும், சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,296க்கும் விற்கப்பட்டது. 9வது நாளாக சவரன் ரூ.40,600க்கும் 10வது நாளாக சவரன் ரூ.40,824க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று காலை தொடர்ந்து 11வது நாட்களாக தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு ரூ.32 அதிகரித்து கிராம் ரூ.5,125க்கும், சவரனுக்கு ரூ.256 உயர்ந்து சவரன் ரூ.41,000க்கும் காலையில் விற்பனையானது. இந்நிலையில் தற்போது மீண்டும் சவரனுக்கு ரூ.456 உயர்ந்து ரூ. 41,200-க்கும், கிராம் ரூ. 57 உயர்ந்து ரூ.5,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். கடந்த 11 நாட்களில் மட்டும் தொடர்ச்சியாக உயர்ந்துள்ளது. தங்கம் தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை உயரும் என்று கூறப்படுகிறது.

Related Stories: