மகாராஷ்டிரா, ஒடிசாவை தொடர்ந்து உ.பி. யிலும் சிறப்பு பாதுகாப்புபடை பிரிவு; ரூ.1,800 கோடி ஒதுக்கி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

லக்னோ: கோர்ட் வளாகங்கள், மெட்ரோ நிலையங்கள், உள்ளிட்ட துறைகளை பாதுகாப்பதற்கு ரூ.1,800 கோடி செலவில் சிறப்பு பாதுகாப்புபடை பிரிவை உருவாக்க உள்ளதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:உயர்நீதிமன்றம் மாவட்டநீதிமன்றங்கள், வழிபாட்டு தலங்கள், வங்கிகள் மெட்ரோ ரயில் நிலையங்கள் நிர்வாக கட்டடங்கள் மற்றும் மாநிலத்தால் முக்கியமானவையாக கருதப்படும் பல்வேறு நிறுவனங்களின் பாதுகாப்பு பணியை சிறப்பு படை கவனிக்கும். மகாராஷ்டிரா மற்றம் ஒடிசா மாநிலங்களில் செயல்பட்டு வரும் புரோவின்சியல் ஆர்ம்டு கான்ஸ்டாபுலரி போன்று உ.பி.,யிலும் சிறப்பு பாதுகாப்பு படை உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தின் காவல்துறை மீதான அழுத்தத்தை குறைப்பதோடு மாநிலத்தில் கூடுதல் வேலை வாய்ப்பையும் உருவாக்கும். இதற்காக ரூ.1,800 கோடி ஒதுக்கப்படுகிறது.

முதற்கட்டமாக ஐந்து பட்டாலியன் படைகளை உருவாக்கப்படும். நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு நிதி ஓதுக்கப்படாததால் துணை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். 2021-2022 ம் நிதியாண்டில் வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். இந்தியாவின் மிகவும் ஏழ்மையான 5 மாநிலங்களில் பிஹார், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், ஜார்கண்ட், அசாம் ஆகியவை அடங்கும். 2019-20 நிதி ஆயோக் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி 5 இந்தியர்களில் ஒருவர் இன்னமும் கூட வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 21% மக்கள் இன்னமும் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் உள்ளனர் என்கிறது நிதி ஆயோக்.

Related Stories: