மல்லித்தழை விலை சரிவு: விவசாயிகள் கவலை

வருசநாடு: மல்லித்தழை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், அதனை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மயிலாடும்பாறை அருகே தங்கம்மாள்புரம், கோவில்பாறை, காமராஜபுரம், வைகைநகர், வருசநாடு, மூலக்கடை, உப்புத்துறை, கருப்பையாபுரம், தும்மக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் முதன்மையாக உள்ளது. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் மல்லித்தழையை நடவு செய்திருந்தனர். தற்போது மல்லித்தழை நல்ல விளைச்சல் கண்ட நிலையில், அறுவடை நடந்து வருகிறது. ஆனால் சந்தையில் அவற்றின் விலை கடுமையாக சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து மயிலாடும்பாறையை சேர்ந்த விவசாயி பிரேந்திரன் கூறுகையில், ‘‘ஒரு கிலோ மல்லித்தழை தற்போது ரூ. 10க்கு விற்பனையாகிறது. இதனால் அதனை பயிரிட்ட விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், மல்லித்தழையை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: