கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என தகவல்..!!

டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களின் பெயர்கள் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என கூறப்படுகிறது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூலை 15ம் தேதியன்று இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் உள்பட ராணுவத்தினர் 20 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். சீனத் தரப்பிலும் 35 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டது.

இந்நிலையில், வீரமரணமடைந்த வீரர்களின் விவரங்களை வெளியிடக் கோரிக்கை எழுந்த நிலையில், அவர்களின் பட்டியலை இந்திய ராணுவம் வெளியிட்டிருந்தது.

வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களின் பெயர் பட்டியல்கள்:

* ஹவில்தார் பழனி,

* சட்னம் சிங்

* மன்தீப் சிங்

* குந்தன் குமார்

* அமன் குமார்

* நாயக் தீபக் சிங்

* சந்தன் குமார்

* கணேஷ் ஹஸ்தா

* கணேஷ் ராம்

* கே.கே.ஓஜா

* ராஜேஷ் ஓரோன்

* சி.கே பிரதான்

* ராம்சோரன்

* கர்னல் சந்தோஷ்பாபு

* சுனில்குமார்

* ஜெய் கிஷோர் சிங்

* பிபுல்ராய்

* குர்தேஜ் சிங்

* அங்குஷ்

* குர்வீந்தர் சிங்

ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். 20 வீரர்களின் பட்டியலில் தமிழக ராணுவ வீரரான ஹவில்தார் கே.பழனியின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்களின் பெயர்களை தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: