புதிய மசோதாவில் மேற்கொள்ள உள்ள திருத்தங்களால் இயற்கை வளம் பாதிக்கக்கூடாது: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சூழலியல் தாக்க மதிப்பீட்டு மசோதா 2020 என்ற புதிய மசோதாவை நிறைவேற்றும் முன்பு, கீழ்காணும் அம்சங்களை சுற்றுச் சூழல் அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. வேளாண் நிலங்கள், காடுகள், நீர்நிலைகள், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது. நில ஆக்கிரமிப்புக்கு முன்பு மக்கள் கருத்தை அறிய வேண்டும். சுற்றுச் சூழல் ஆர்வலர் குழு மற்றும் மாநில அரசின் கருத்தையும் பெற வேண்டும். புதிய மசோதாவில் மேற்கொள்ள இருக்கும் திருத்தங்களால் இயற்கை வளம் பாதிக்கப்படக் கூடாது, மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது. மேற்கண்ட பாதுகாப்பு அம்சங்களை வரைவு சட்டத் திருத்தத்தில் சேர்ப்பதற்கு, ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: