மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு முன்னுரிமை ஆஸி.யில் இந்தியர்கள் 38,000 பேருக்கு குடியுரிமை: கடந்த ஆண்டை விட 60% அதிகம்

மெல்போர்ன்: உலகளவில் தற்போது பாதுகாப்பு, தஞ்சம்,வேலை வாய்ப்பு, தொழில் என்று பல்வேறு காரணங்களால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில் (2019-20) 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஆஸ்திரேலிய அரசு குடியுரிமை அளித்துள்ளது. இதில், 38,209 பேர் இந்தியர்கள். இது கடந்தாண்டை காட்டிலும் 60 சதவீதம் அதிகமாகும். இது தவிர 25,011 இங்கிலாந்து நாட்டினர், 14,764 சீனர்கள், 8,821 பாகிஸ்தானியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்நாட்டு குடியுரிமை சேவைகள் மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஆலன் டுட்ஜ் கூறுகையில், ``ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று வெளிநாட்டினர் இங்கு வாழ விரும்புவது என்பது இந்நாடு, மக்கள், அதன் மதிப்பீடுகளின் மீது நம்பிக்கை கொள்வதாகும்,’’ என்றார். கொரோனா கால கட்டத்திலும் ஆஸ்திரேலிய குடியுரிமை சேவை அமைச்சகம் ஆன்லைன் மூலம் குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலித்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குடியுரிமை வழங்கி உள்ளது.

* 6.19 லட்சம்...

கடந்த 2016ம் ஆண்டைய புள்ளி விவரத்தின்படி, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 6.19 லட்சம் பேர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். அவர்களில் 5.92 லட்சம் பேர் இந்தியாவில் பிறந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Related Stories: