பிரான்சில் இருந்து புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானாவில் அம்பாலா விமான தளத்தில் தரையிறங்கின

ஹரியானா: ஹரியானாவில் அம்பாலா விமான தளத்தில் பிரான்சில் இருந்து வந்த ரஃபேல் போர் விமானங்கள் தரையிறங்கிது. ரஃபேல் விமானங்களுக்கு வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பிரான்சில் புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் யு.ஏ.இ. வழியாக இன்று இந்தியா வந்தன. ரஃபேல் போர் விமானங்கள் மணிக்கு 2,222 கி.மீ. வேகத்தில் பறந்து சென்று தாக்கக்கூடியது. இரட்டை எஞ்சின்கள் கொண்ட ரஃபேல் விமானம் 50 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் திறன் பெற்றது. 9,500 கிலோ எடையுள்ள குண்டுகளை எடுத்துச் சென்று வீசவல்லது ரஃபேல் விமானம். ஒரு தடவை எரிபொருளை நிரப்பினால் 3,700 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் திறன் பெற்றது. ரஃபேல் 5.3 மீட்டர் உயரம் உள்ள ரஃபேல் போர் விமானம் 15.3 மீட்டர் நீளம் உடையது. ரஃபேல் விமானத்தின் இறக்கைகள் 10.9 மீட்டர் அகலத்துக்கு விரிந்தவை ஆகும்.

Related Stories: