ஓசூரில் பேட்டரியில் ஓடும் சைக்கிள் கண்டுபிடிப்பு...! தனியார் தொழிற்சாலை தொழிலாளியின் புதிய முயற்சியால் குவியும் பாராட்டுகள்!!!

ஓசூர்:  ஓசூரில் பேட்டரியால் ஓடும் சைக்கிள் ஒன்றை தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். ஓசூரில் ஆவலப்பள்ளி பகுதியில் பாண்டியராஜன் என்பவர் தந்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஐ.டி.ஐ மெக்கானிக் படித்துள்ள இவர் அருகிலுள்ள கனரக தொழிற்சாலை ஒன்றில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.  தற்போது ஊரடங்கு காரணமாக தொழிற்சாலையில் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இவர் எப்போதும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கமாகும். இதனால் சைக்கிளில் தான் பணிபுரிந்த தொழிற்சாலைக்கு சென்று வந்துள்ளார்.

பின்னர், அவர் வசிக்கும் பதியானது மிகவும் மேடாக அமைந்துள்ளதால், வெகுதூரம் சைக்கிளை அவரால் ஒட்டி செல்ல முடியவில்லை. இந்த நிலையில் தற்போது முழுமையாக பேட்டரியில் ஓடும் சைக்கிளை இவர் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் சைக்கிளில் வெகு தூரத்திற்கு பயணிக்க ஏதுவாக அமைந்துள்ளது. பின்னர், பேட்டரியில் ஜார்ஜ் தீர்ந்தவுடன் சைக்கிளில் சாதாரணமாக பிடல் போட்டும் செல்லலாம். அதாவது 25 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த சைக்கிளுக்கு தற்போது 12 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.

மேலும், அரசாங்கம் உதவி செய்தால் இந்த சைக்கிளை பயன்பாட்டிற்கு கொண்டு செல்லலாம் என்று பாண்டியராஜன் கூறியுள்ளார். இதனை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் இந்த வகை சைக்கிளை பயன்படுத்தினால், போக்குவரத்து நெரிசல் குறையும்  எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பேட்டரி சைக்கிளை கண்டுபிடித்த தனியார் தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Stories: