ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆளுநர் கருத்து: இந்திய தேர்தல் ஆணையம் எதிர்ப்பு..!!

டெல்லி: ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தங்களை தவிர பிற அமைப்புகள் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், அதில் குறிப்பிட்டதாவது: தேர்தல் குறித்து முடிவெடுக்கும் போது பாதுகாப்பு , நோய் பரவல் போன்றவற்றை ஆய்வு செய்த பின்னரே அறிவிப்புகள் வெளியாகும் எனவும் பிற அமைப்புகள் தேர்தல் பற்றி கருத்து தெரிவிப்பது , தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தில் தலையிடுவது போன்றது எனவும் குறிப்பிடபட்டுள்ளது.

மேலும் அதில், முன்னதாக ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையறைக்குப் பின்னர் தேர்தல் நடைபெறும் என்று அந்த யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர்  கிரீஷ் சந்திர முர்மு தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் உள்ளது. பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி தேர்தலை இதுவரை தேர்தல் ஆணையம் நடத்தாமல் உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: