தமிழகத்தில் மறுதேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்!: ஓரிரு நாளில் முடிவு வெளியாக வாய்ப்பு..!!

சென்னை: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு மறுதேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியுள்ளதால் ஓரிரு நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 24ம் தேதியன்று நடைபெற்ற கடைசி தேர்வான வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளை தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 482 மாணவர்கள் எழுத இயலவில்லை.

தொடர்ந்து தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தேர்வு எழுதாத மாணவர்களுக்காக மறுத்தேர்வு ஜூலை 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாணவர்களுக்கு மறு வாய்ப்பாக நேற்று மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. 800 பேர் தேர்வெழுத அனுமதி சீட்டு பெற்ற நிலையில், இதில் மாநிலங்கள் முழுவதும் 289 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 300 மாணவர்கள் மட்டுமே தேர்வை எழுதினர்.

தேர்வு முடிந்ததும், மறுதேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு மையத்துக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தொடங்கியது. மறு தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: